Skip to main content

‘கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்’ - திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர்

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

cm stalin launched the all-day alms program at temples

 

தமிழக முதல்வர் ஸ்டாலின் மேலும் மூன்று கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

 

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து வருகிறார். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயம், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

 

ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பழனி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கி வரும் நிலையில், தற்போது மேலும் 3 கோயில்களில் அத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். மேலும், 854 கோயில்களில் ஒரு வேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்