Advertisment

தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு

cm Stalin conducts surprise inspection Omalur

சேலம் மாவட்டம் ஓமலூர் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் சேலம் மண்டலம் அளவிலான ஆய்வுக் கூட்டத்தை நடத்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் சேலம் சென்றுள்ளார். அப்போது திடீரென ஓமலூர் தனி வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் அளித்துள்ள மனுக்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திடீர் ஆய்வு நடத்தி வருகிறார்.

Advertisment

முதலில் சேலம் மண்டல அளவிலான கள ஆய்வில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவதாக இருந்த நிலையில் திடீரென ஓமலூர் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருவது அங்கிருந்த மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த ஆய்விற்குப் பிறகு மேற்கண்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அத்துடன் விவசாயிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து பிரச்சனைகளை கேட்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe