Advertisment

அருட்தந்தை முனைவர் ஜான் பிரிட்டோ மறைவுக்கு முதல்வர் இரங்கல்

cm stalin Condolences on Reverend Dr. John Britto

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் அருட்தந்தை ஜான் பிரிட்டோ உயிரிழந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல்அறிக்கையில், “திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் அதிபரும், முதல்வரும், செயலாளருமான அருட்தந்தை முனைவர் ஜான் பிரிட்டோ அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் மனம் வருந்தினேன்.

தாவரவியல் வல்லுநரான அருட்தந்தை ஜான் பிரிட்டோ அவர்கள், ஏழை, எளிய மாணவர்கள் பலரும் உயர்கல்வி பெற உதவி, அவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறவும் உறுதுணையாக இருந்துள்ளார். அவரது பிரிவால் வாடும் ஜெயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe