/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chief minister_0.jpg)
இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூபாய் 70.54 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று (22/09/2020) அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிசாமி.
மேலும் ரூபாய் 24.24 கோடி மதிப்பிலான நிறைவுற்ற திட்டப்பணிகளையும் நேரில் தொடங்கி வைக்கும் முதல்வர், சுமார் 15,605 பயனாளிகளுக்கு ரூபாய் 72.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
அதைத்தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கரோனா தடுப்பு பணிகள் குறித்தும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பல்வேறு துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
Follow Us