காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 22,436 பயனாளிகளுக்கு ரூபாய் 742.52 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கினார் முதல்வர் பழனிசாமி.
அதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூபாய் 120 கோடி மதிப்பில் 43 பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் பழனிசாமி, 2,112 அடுக்கு மாடி குடியிருப்புகள் உட்பட ரூபாய் 291 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில், கரோனா தடுப்புப் பணிகள், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், பல்வேறு துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.