Advertisment

"நான் ஒரு விவசாயி"- முதல்வர் பழனிசாமி!

cm palanisamy press meet at ramanathapuram district

இராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கு பின்னர் தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

Advertisment

"தமிழகம் முழுவதுமே கரோனா படிப்படியாகக் குறைந்து வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது. முதலமைச்சரின் சிறப்பு குறைத் தீர்ப்பு திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மனுக்களைப் பெற்று வருகின்றனர். ரூபாய் 14,000 கோடியில் காவிரி- குண்டாறு திட்டம் நிறைவேற்றப்பட்டால் இராமநாதபுரம் மாவட்டம் செழிப்படையும். காவிரி- குண்டாறு திட்டத்தின் மூலம் இராமநாதபுரத்தில் உள்ள நீர் நிலைகள் செழிப்படையும். இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர் நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. விவசாயம் செய்யும் என்னை விவசாயி என்று தான் என்னால் கூறிக் கொள்ள முடியும்.

Advertisment

ஒரு விவசாயி என்பதால் தான் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. விவசாயம் பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன், விவசாயம் செய்பவன். விவசாயிகளுக்கு பலன் அளிக்கக் கூடியவை என்பதால் தான் மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை ஆதரித்தோம். வேளாண் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்த்துபேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியிடம் விளக்கம் கேட்கப்படும். விவசாயிகளைப் பாதிக்கும் எந்த திட்டத்தையும் அதிமுக எதிர்க்கும். காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் செய்தது மு.க.ஸ்டாலின்தான். ஹைட்ரோ கார்பன் திட்டம் காவிரி டெல்டாவிற்கு வர காரணம் மு.க.ஸ்டாலின்தான்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக்கி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்தது அதிமுக அரசு. ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, அரசுக் கல்லூரி அமைக்கப்பட்டு வருகிறது." இவ்வாறு முதல்வர் கூறினார்.

கோட்டையில் பாஜக கொடி பறக்கும் என எல்.முருகன் கூறியது பற்றிய கேள்விக்கு, "கோட்டையில் தேசிய கொடிதான் பறக்கும்" என முதல்வர் பதிலளித்தார்.

இதனிடையே, சசிகலா விடுதலையாகி அதிமுகவில் இணைந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இந்த கேள்விக்கு தகுதியான இடம் இது வல்ல;எனக்கூறிமுதல்வர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

cm palanisamy PRESS MEET Ramanathapuram district
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe