Skip to main content

செந்தில் பாலாஜி நிதியைப் புறக்கணித்தது ஏன் ? - முதல்வர் விளக்கம் !

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

செந்தில் பாலாஜி நிதியைப் புறக்கணித்தது ஏன் ? என்பது குறித்து விளக்கமளித்த முதல்வர் பழனிசாமி, "தொகுதி மேம்பாட்டு நிதி வழிமுறைப்படி சம்பந்தப்பட்ட பகுதிகளில் தான் நிதியைப் பயன்படுத்த முடியும்.எம்எல்ஏக்களின் பரிந்துரைப்படி வரையறுக்கப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.இதை அறியாமல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வழிமுறைகளின்படி செய்ததைத் குறை கூறியுள்ளார்" என்றார்.

இதனிடையே அனைத்து எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 1 கோடியை பிடித்தம் செய்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

cm palanisamy explanation for senthil balaji mla fund

 

கரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிக்காக ரூபாய் 1 கோடி நிதியைச்  சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஒதுக்கியிருந்தார்.மேலும் கரூர் அரசு மருத்துவமனை உள்பட பல மருத்துவமனைக்கு உபகரணம் வாங்க நிதியைப் பயன்படுத்தவும் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 




 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷங்கர் வீட்டு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
shankar daughter aishwarya marriage cm mk stalin wished

முன்னணி இயக்குநராக வலம் வரும் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா, பணியாற்றி வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தொழிலதிபர் மற்றும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ரோஹித் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ரோகித்தை ஐஸ்வர்யா விவாகரத்து செய்தார். பின்பு ஷங்கர் வீட்டிலே வசித்து வந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் தருண் கார்த்திகேயன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து திருமண விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின், மற்றும் திரைப்பிரபலங்கள் பலருக்கும் ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார்.  

இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.