கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக செப்டம்பர் 23- ஆம் தேதி தமிழகம் உள்பட 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, பிரதமரின் ஆலோசனையில் பங்கேற்கிறார். முதல்வருடன் அமைச்சர்கள், தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் உடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால், வரும் 23- ஆம் தேதி கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறவிருந்த முதல்வரின் ஆய்வுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வரும் 22- ஆம் தேதி திட்டமிட்டப்படி ராமநாதபுரத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்யவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.