
திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட வரைவு 2021 மசோதாவைக் கடந்த ஜூன் 18ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இந்த மசோதாவுக்குப் பல்வேறு திரைப் பிரபலங்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தனர். மேலும், சுமார் 1,400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார்கள். மேலும், இதுகுறித்து திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தங்களின் கோரிக்கையைத் தெரிவித்ததுடன், இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்கள்.
இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய தகவல் ஒளிப்பரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், "மாநில அரசின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலும் இந்த மசோதா உள்ளது. எனவே அதனைத் திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.