
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாளை (24/05/2021) முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (22/05/2021) அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் இன்று (23/05/2021) காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.
இந்த ஆலோசனையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நாளை முதல் அமல்படுத்துவது, கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆலோசிக்க உள்ளார்.