மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து வழக்கமான பரிசோதனைகள் முடிந்த பிறகு வீடு திரும்புவார் என அப்போலோ மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுஇருந்தது.
இந்நிலையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.