சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 99ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தங்க சாலையில் நடந்து சென்ற முதல்வர், இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அடங்கிய நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு வழங்கினார். முதல்வர் ஸ்டாலினுடன் சேகர் பாபு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பலர் உடனிருந்தனர்.