cm mk stalin visit vellore regional district collector transfer 

Advertisment

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் தொடக்க விழாவினைவேலூர் மண்டலத்தில் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மண்டல காவல்துறை அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அரசு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் கள ஆய்வில் முதலமைச்சர் ஈடுபட்டார்.

இந்நிலையில், திருப்பத்தூர்,ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் இன்றுஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் ஆட்சியராக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த இடமாற்றம் இரண்டு மாவட்ட அரசு அதிகாரிகளிடமும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.