Advertisment

“நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதுதான் இலக்கு” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

CM MK Stalin speech Number one Tamil Nadu is the goal 

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி கிராமத்தில் முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமிக்கு ரூ. 4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலையுடன் கூடிய நினைவத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் 21 சமூகநீதிப் போராளிகளுக்கு ரூ. 5.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அதோடு 21 சமூகநீதிப் போராளிகளின் உருவச் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து ரூ. 424.98 கோடி செலவில் 231 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். அதே சமயம் ரூ. 133.30 கோடி மதிப்பீட்டில் 116 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு ரூ. 323.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “சில எதிர்க்கட்சித் தலைவர்கள் வெறும் குறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அது ஆட்சியின் குறை இல்லை. அவர்கள் சிந்தனையில் ஏற்பட்டிருக்கக்கூடிய குறைபாடு.

Advertisment

அவர்கள் தானும் நல்லது செய்ய மாட்டார்கள், அடுத்தவர்களையும் நல்லது செய்ய விடமாட்டார்கள். மக்களுக்கு நல்லது நடந்தால் அவர்களுக்குப் பிடிக்காது. அதைப் பற்றி கவலைப்படாமல் நாம் நம்முடைய கடமையை தொடர்ந்து ஆற்றிக் கொண்டு வருகிறோம். இதே விழுப்புரத்தில், கலைஞர் 2004ஆம் ஆண்டு சொன்னதை நான் இன்னும் மறக்கவில்லை. விழுப்புரத்தில் நடந்த தி.மு.க. மாநாட்டுக்கு முதன்முதலாக நான் தலைமை வகித்தேன். அப்போது கலைஞர் பேசும்போது, எனக்கு ஒரு அறிவுரையைச் சொன்னார். ‘நான் என்னுடைய 26ஆவது வயதில் ஒரு மாநாட்டிற்கு தலைமை வகிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பு 50வது வயதில்தான் கிடைத்திருக்கிறது.

இவ்வளவு தாமதமாக கிடைக்கக் காரணம், எதுவும் அவசரமாக, விரைவாக கிடைப்பதைவிட தாமதமாக கிடைத்தால்தான் அதற்கு வலு அதிகம். அந்த வலு உனக்கு சேர்ந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டார் கலைஞர். சொல்லிவிட்டு, மற்றொன்றையும் கூறினார். ‘எல்லோரும் உன்னை அங்கீகரித்ததாக நினைத்து நீ நடைபோடக்கூடாது. எங்கிருந்து உனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையோ அதை தெரிந்துக்கொண்டு எல்லோரிடமும் அங்கீகாரம் பெறவேண்டும் என்ற அணுகுமுறையை நீ கற்றுக்கொள்ளவேண்டும்’ என்று சொன்னார்.

CM MK Stalin speech Number one Tamil Nadu is the goal 

அந்த அறிவுரையை என் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நெறிமுறையாக கொண்டு செயல்படத் தொடங்கினேன். அதனால்தான் வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து எந்தப் பாகுபாடும் பார்க்காமல் முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், 'நம்பர் ஒன் முதலமைச்சர்' என்பதைவிட 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்பதுதான் என்னுடைய இலக்கு. அதற்காக தான் இந்தியாவையே திரும்பிப் பார்க்கின்ற திட்டங்களை செய்கிறோம்.

villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe