“தமிழ்ச் சமூகம் என்பது சமத்துவ சமூகம்...” - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

vairamuthu-book-realise

சென்னை, காமராசர் அரங்கத்தில் இன்று (13.7.2025) நடைப்பெற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய “வள்ளுவர் மறை வைரமுத்து உரை” நூலினை வெளியிட்டார்.  இதனை  முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்  பெற்றுக் கொண்டார். இவ்விழாவில், முன்னாள் தலைமை செயலாளர் வெ. இறையன்பு, பர்வீன் சுல்தானா, அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நூலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உரையாற்றுகையில், “திருக்குறள் 2 அடிதான். ஆனால் 2000 ஆண்டுக்கு மேலாக அதற்கு புதுப்புது பொருள்களைச் சொல்லி உலக மக்கள் எல்லோரும் புது வழியை, நல்வழியைச் சொல்லக்கூடிய உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது. அதனால் தான் மணக்குடவர், பரிமேலழகர் தொடங்கி முத்தமிழ் அறிஞர் கலைஞர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் இன்றைக்குக்  கவிப்பேரரசு வைரமுத்து இணைந்திருக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து இயற்றியுள்ள இந்த திருக்குறள் தீபத்தில் வள்ளுவர் எழுதினது தான் நீதியென்று சொல்லப் புத்தகத்தின் தலைப்பே, ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்று கவிதை மிடுக்கோடு வைத்துள்ளார்.

திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் அவருக்கு ஒவ்வாத சாயத்தைப் பூசி மறைப்பதற்கு முயற்சிகள் நடக்கிற இந்த கால கட்டத்தில் தன்னுடைய உரைவாளை எடுத்து உடைவாளாக வீசி இருக்கிறார் கவிப்பேரரசு. கவிப்பேரரசு வைரமுத்து இந்த புத்தகத்தின் முன்னுரையில் திராவிட பண்பாட்டை ஆரியப் பண்பாடு நகர்த்தவோ, தகர்க்கவோ முனைந்த காலகட்டத்தின் விழும்பில் தமிழ் மரபு காக்கும் தனிப்பெரும் அரணாக வள்ளுவம் எழுந்தது” என்று சொல்லி 2000 ஆண்டுக் கால வரலாற்றை தன்னுடைய சொற்களால் எடுத்து சொல்லிவிட்டார். திருக்குறள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் இது தமிழர்களான நமக்கு மட்டும் சொந்தமான நூல் கிடையாது. 

அதனால் தான் திருக்குறளோடு பொருளை உணர்ந்த பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 60 ஆண்டுகளுக்கு முன்னாலேயே திருக்குறள் மாநாட்டை நடத்தினார். திருக்குறளை அச்சிட்டுப் பரப்பினார். மதங்களை வெறுத்தவர் உங்கள் மதம் குறள் மதம் என்று சொல்லுங்கள். உங்கள் நெறி குறள் நெறி என்று சொல்லுங்கள் என்று சொன்னார். பேரறிஞர் அண்ணா, ‘திருக்குறளைப் படிப்பவர்களாக மட்டுமல்ல பின்பற்றவர்களாக நாம் வாழ வேண்டும்’ என்று சொன்னார். கலைஞர், ‘குறள் மனிதர்களாக நாம் வாழ வேண்டும்’ என்று சொன்னதோடு இன்றைக்கு புது பொழிவோடு உள்ள வள்ளுவர் கோட்டத்தைக் கட்டினார். 

இந்தியத் துணைக்கண்டம் தொடங்கக் கூடிய குமரி முனையில் ஆண்டுகள் கடந்து சுனாமியையும் எதிர்த்து நிற்கக்கூடிய ஐயன் வள்ளுவருக்கு வானுயர சிலையை உருவாக்கினார். குரலோவியம் தீட்டினார். குறளுக்கு உரை எழுதினார். தமிழின் சின்னம் தமிழினத்தின் சின்னம் திருவள்ளுவர் தான் என்பதை அடையாளம் காட்டி செம்மொழி மாநாட்டோடு சென்னையில் வள்ளுவரையும் குறளையும் இடம்பெறச் செய்தார். தமிழ்ச் சமூகம் என்பது சமத்துவ சமூகம் என்பதை நிறுவ வள்ளுவருடைய வரிகளான, ‘பிறப்புக்கும் எல்லா உயிருக்கும்’ எனச் சொல்லித்தான் அந்த மாநாட்டை மைய நோக்கு பாடலையே உருவாக்கித் தந்தார். திருக்குறளைத் தூக்கிப் பிடித்து இதுதான் நம் இனத்துக்கான கலங்கரை விளக்கம் என்று போராடி வாதாடிப் பரப்பி வருவது தான் நம்முடைய திராவிட இயக்கம்” எனப் பேசினார். 

Book release mk stalin Thirukkural Vairamuthu
இதையும் படியுங்கள்
Subscribe