Advertisment

“50 மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர்” - முதல்வர் கடிதம்!

mks-1

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதாக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட மற்றொரு துயர சம்பவத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இன்று (13.07.2025)அதிகாலையில், 7 மீனவர்கள் அவர்களின் இயந்திர மீன்பிடி படகுடன் கைது செய்யப்பட்டனர். 

Advertisment

அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், மற்றொரு இயந்திர படகு இலங்கை கடற்படை கப்பலால் மோதப்பட்டது. இதனால் படகின் பின்புறம் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளது தெரிய வருகிறது.  மீண்டும் மீண்டும் நிகழும் இந்த சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன. அவை நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பங்களை நீண்டகால பொருளாதார நெருக்கடி மற்றும் தொடர்ந்த துயரங்களுக்கும் உள்ளாக்குகின்றன. இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கும் வகையில் 2024ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மீனவர்களில் பலர் இன்னும் இலங்கை காவலில் உள்ளனர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

தற்போது, 232 தமிழக மீன்பிடி படகுகளும் 50 மீனவர்களும் இன்னும் இலங்கை அதிகாரிகளால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த தொடர்ச்சியான அச்சங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கிடைக்கக்கூடிய அனைத்து தூதரக வழிகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை   கேட்டுக் கொள்கிறேன். அதோடு, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளனர். 

letter Jaishankar mk stalin Tamil fishermen Sri Lanka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe