சிதம்பரம் சென்றடைந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

cdm-mks-

தமிழக அரசின் சார்பில், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம் நாளை (15.07.2025) நாளை கடலூர் மாவட்ட சிதம்பரத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அதன்படி இந்த திட்டம் நாளை முதல் வரும்  நவம்பர் மாதம் வரை  செயல்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு 46 வகையான அரசுத் திட்டங்களின் சேவைகள் அனைத்தும் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில் இந்த  திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் விரைவு ரயில் மூலமாக இன்று (14.07.2025) இரவு சிதம்பரம் சென்றடைந்தார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலினும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு தெரிவித்தனர்

நாளை உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர் முடிவுற்ற நிலையில் இருக்கும் பல்வேறு அரசு அரசுத் திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அதன் பிறகு பல்வேறு மயிலாடுதுறை மாவட்டத்திற்குச் சென்று  பல்வேறு முக்கிய ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ள உள்ளார். அதன் பின்னர் நாளை மறுநாள் (16.07.2025) மயிலாடுதுறையில் இருந்து சோழன் எக்ஸ்பிரஸ் மூலமாக மீண்டும் சென்னை வர உள்ளார். 

இதையும் படியுங்கள்
Subscribe