ADVERTISEMENT

அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்

10:21 AM Jan 01, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் அகவிலைப்படியை 4 சதவீதமாக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 2,359 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்ட நிலையில், தற்போது இதனை 4 சதவீதம் உயர்த்தி 38 சதவீதமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமைலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சம வேலைக்கு சம ஊதியத்தை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிக்க ஒரு குழு ஒன்று அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரையின் பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT