Advertisment

நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

CM MK Stalin obituary for Nagai MP Selvaraj 

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர் எம். செல்வராஜ் (வயது 67). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக்குழுவின் உறுப்பினராகவும் இவர் பதவி வகித்துள்ளார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில் எம்.பி., எம்.செல்வராஜ் சிகிச்சை பலனின்றி இன்று (13.05.2024) காலை காலமானார். மறைந்த எம். செல்வராஜ் கடந்த 1989,1996,1998 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகள் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

CM MK Stalin obituary for Nagai MP Selvaraj 

இந்நிலையில் நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நாகை எம்.பி செல்வராஜ் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். என்மீது கொள்கை ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் மிகுந்த பாசமும் நன்மதிப்பும் கொண்டவர். செல்வராஜின் மறைவு பொதுவுடைமை இயக்கம், டெல்டா மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

cpi selvaraj Nagapattinam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe