பிரபல எழுத்தாளர் மறைவு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! 

Cm MK Stalin obituary Famous Writer passed away

பிரபல எழுத்தாளரான இந்திரா சௌந்தர்ராஜன் (வயது 65) மதுரையில் வசித்து வந்தார். இத்தகைய சூழலில் தான் அவரது வீட்டில் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்த நிலையில் அவரது உயிர் உயிரிழந்தார். இவர் ஏராளமான நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவரான இந்திரா சௌந்தர்ராஜன் நூற்றுக்கணக்கான நூல்களைப் படைத்தவர். வரலாற்றுக் காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்துச் சுவாரசியமான முறையில் புதினங்களைப் புனைவதில் வல்லவர்.

வெற்றிகரமான பல தொலைக்காட்சித் தொடர்களிலும் இந்திரா சௌந்தர்ராஜன் பங்காற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

madurai writer
இதையும் படியுங்கள்
Subscribe