Advertisment

சபாநாயகரிடம் கோரிக்கை வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

CM MK Stalin made a request to the Speaker

Advertisment

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று (21.06.2024) காலை 10 மணிக்குத்தொடங்கியது. அப்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதே சமயம் அதிமுக உறுப்பினர் அனைவரும் இருக்கையில் அமருமாறு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் அதிமுகவினர் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் சபாநாகர் அப்பாவுவின் எச்சரிக்கையைமீறி அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதோடு அவை நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் செயல்பட்டதால் இன்று ஒருநாள் சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க பேரவை தலைவர் தடைவிதித்திருந்தார்.

இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், “டிசம்பர் 2001 இல் இதுபோன்று ஒரு நிகழ்வு கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில் நடைபெற்று, 52 நபர்கள் மரணமுற்று. 200-க்கும் மேற்பட்டோர் மிகுந்த பாதிப்புக்குள்ளானார்கள். அப்போது உரிய நடவடிக்கை சரிவர எடுக்கப்படவில்லை என்று எல்லோரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணியும், தி. வேல்முருகனும், அவையிலேயே இதுகுறித்து மார்ச் 2002 ஆம் ஆண்டு உரையாற்றியிருக்கிறார்கள்.

CM MK Stalin made a request to the Speaker

Advertisment

தற்போது இந்தச் சம்பவம் குறித்து என்னுடைய கவனத்திற்கு வந்தவுடனேயே நான் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதுகுறித்து நான் அனைத்து உறுப்பினர்களும் பேசிய பின்னர் விரிவாகப் பதில் வழங்குகிறேன். அப்போது சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை, தற்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள காரணத்தால், இப்போது பேசுகிற உறுப்பினர்கள் அந்த நிகழ்வு குறித்துப் பேசுவார்களோ என பயந்துதான் இவர்கள் இன்றைக்குத் திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டு, மரபுகளுக்கு மாறாக குழப்பம் விளைவிக்க முயன்று வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயக முறையில் இந்த மாமன்றம் நடைபெறவேண்டும் என்பதில் கலைஞரும், நானும் அசையாத கொள்கை உறுதி கொண்டவர்கள்.

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திலே பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதில் கொள்கை உறுதி கொண்டவன் இந்த முதலமைச்சர். தாங்களும் பல கோரிக்கைகள் வைத்து, மாண்புமிகு பேரவை முன்னவரும் பேசுவதற்கு வாய்ப்பு தரலாம் என பரிந்துரை செய்தும் முதலமைச்சராக, அமைச்சர்களாக இருந்தவர்கள் இங்கே நடந்துகொண்ட முறை தவிர்த்திருக்கப்பட வேண்டியதுதான். பேரவை விதி 120 இன்கீழ் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.

CM MK Stalin made a request to the Speaker

அதில் நான் கருத்துச்சொல்ல விரும்பவில்லை. எனினும் என்னுடைய வேண்டுகோளாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இன்றைக்குக் காலையிலும், மாலையிலும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில், வெளியேற்றப்பட்டவர்கள் இந்த அவைக்கு வினாக்கள் விடைகள் நேரம் முடிந்த பின்னரே அனுமதிக்கப் பெறலாம் என்னும் வேண்டுகோளையும், பிரதான எதிர்க்கட்சி தன்னுடைய கருத்தினைப் பதிவு செய்ய வாய்ப்பு தர வேண்டும் என்றும், இதனைத்தாங்கள் பரிசீலித்து ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டு அமர்கிறேன்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முதல்வரின் உரையைச் சுட்டிக்காட்டி அதிமுக உறுப்பினர்கள் அவைக்குள் வர சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார். இருப்பினும் அவை நிகழ்வில் பங்கேற்கவில்லை என அதிமுக அறிவித்தது. அதோடு சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்து புறப்பட்டுச் சென்றார்.

kallakurichi admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe