Advertisment

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; அதிரடி காட்டிய போலீஸ்!

CM mk Stalin house to threat

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு கொண்ட அடையாள தெரியாத நபர் ஒருவர், முதல்வர் ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீட்டில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறை அதிகாரிகள் அந்த தொலைப்பேசி எண்ணை வைத்து, மிரட்டல் விடுத்த நபர் யார் என்று தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

Advertisment

போலீசாரின் விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் உச்சம்பாறையைச் சேர்ந்த இசக்கிமுத்து(30) என்பவர்தான் முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை செய்ததில், மதுபோதையில் முதல்வரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். ஏற்கனவே இசக்கிமுத்து இது போன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாகவும், பின்னர் போலீசார் எச்சரித்து அவரை விடுவித்ததாகவும் கூறப்படும் நிலையில் தற்போது முதல்வரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

arrested kanniyakumari police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe