தமிழகத்தில் உள்ள சில மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசுத் துறையில் உள்ள உயர் அலுவலர்கள் என 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்கள். ஈரோடு ஆட்சியராக இந்த ராஜகோபால் சென்னைக்கு மாற்றப்பட்டார். ஈரோடு ஆட்சியராக ஆவடி மாநகராட்சி ஆணையராக இருந்த கந்தசாமி நியமிக்கப்பட்டார். ஐ.ஏ.எஸ். அதிகாரி கந்தசாமியின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை. அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்.
தாய் தமிழ் மொழி மீது தீராத பற்று கொண்டவர். திராவிட இயக்க, முற்போக்கு இலக்கிய நூல்களில் ஆர்வம் கொண்டவர். இலக்கியவாதியாக, எழுத்தாளராகச் செயல்படும் ஐஏஎஸ் அதிகாரியான கந்தசாமி கடந்த 27ஆம் தேதி ஈரோட்டில் புதிய ஆட்சியராகப் பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் இன்று (30.06.2025 - திங்கள் கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து, எளிய மக்களின் வாழ்வியலைப் படைப்புகளாகத் தந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கதைகள் என்ற நூலை முதல்வரிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, “ஈரோடு என்பது பெரியார் மண், கலைஞரின் குருகுலம். ஈரோட்டின் ஆட்சியாளராக மக்கள் பணியைச் சிறப்புடன் செய்யுங்கள்” என ஆட்சியர் கந்தசாமியை முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்தியிருக்கிறார்.