Advertisment

சாலை விபத்தில் கோட்டாட்சியர் உயிரிழப்பு; ‘ரூ. 1.15 கோடி நிவாரணம் ’ - முதல்வர் அறிவிப்பு!

CM mk stalin announces compensation for rto lost his life in dies in road incident

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் மேக்குடி கிராமத்தில் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்குள்ள கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா இன்று (19.06.2025) காலை 11.45 மணியளவில் நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து கோட்டாட்சியரின் கார் மீது மோதியது. இதில் கோட்டாட்சியரின் நான்கு சக்கர வாகனம் நிலை தடுமாறி அருகில் பழுது பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது எதிர்பாதாராதவிதமாக மோதியது.

Advertisment

இந்த விபத்தில் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா உயரிழிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் உயிரிழந்த கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ சாலை விபத்தில் சிக்கி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.

Advertisment

கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனாவின் உயிரிழப்பு வருவாய்த் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ஆரமுத தேவசேனாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆரமுத தேவசேனாவின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்த அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும். மேலும், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

CM RELIEF FUND mk stalin incident car rto trichy musiri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe