625 கோடியில் மின்மாற்றிகள் மாற்றும் திட்டம்... முதல்வர் தொடங்கி வைத்தார்!

CM launches Rs 625 crore transformer replacement project

தமிழகத்தில் கூடுதல் மின்பளு மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக மின்மாற்றிகள் மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை சென்னை கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கூடுதல் மின்பளு மற்றும் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்மின் பகிர்மான கழகத்தின் சார்பில் 8,905 புதிய மின்மாற்றிகள் 625 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள. இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மின்மாற்றிகள் அமைப்பதற்கான பணிகள் மின் வாரியத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கொளத்தூரில் 6 இடங்களில் மின்மாற்றிகள் மாற்றும் பணிகள் தொடங்க உள்ளன. அதற்கான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

electicity mk stalin senthilbalaji
இதையும் படியுங்கள்
Subscribe