Advertisment

மத்திய அரசை கண்டித்து முதல் அமைச்சர் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Advertisment

மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்காத மத்திய பாஜக அரசை கண்டித்தும், தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக இருந்த, வன்கொடுமை தடுப்பு சட்டத்திட்டத்தை நீர்த்துப்போகும் வகையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ரத்து செய்யக் கோரியும் வலியுறுத்தப்பட்டது.

Advertisment

முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

cauvery issue Central Government protest fasting cm congress pondy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe