இறந்த தாய் மாமன் வீட்டுக்கு நேரில் வந்த முதல்வர் பழனிசாமி...!

CM edappadi palanisami visite erode for personal issue

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாய்மாமன் இறந்துவிட்டதால், அந்தத் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் ஈரோடு மாவட்டம் அந்தியூரையடுத்த மைக்கேல் பாளையம் எனும்கிராமத்திற்கு, இன்று (02.12.2020) நேரில் வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அந்தியூர் அ.தி.மு.கஒன்றிய முன்னாள் செயலாளராக இருப்பவர்சூளை ராஜா. இவரது தகப்பனார் கருப்ப கவுண்டர். இவர் 1 -ஆம் தேதி, உடல்நலக் குறைவால் காலமானார். மறைந்த கருப்ப கவுண்டர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாளின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். முதல்வருக்குத் தாய்மாமன் உறவு.

இன்று, 2ஆம் தேதி காலை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து கிளம்பி விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம் சென்று தனது தாய்மாமனின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். பின்னர், அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, சூளை ராஜா குடும்பத்தாரிடம் சிறிது நேரம் பேசினார். அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பணன்ஆகியோரும் முதல்வருடன் வந்திருந்தனர்.

edappadi pazhaniswamy
இதையும் படியுங்கள்
Subscribe