Advertisment

த.வெ.க. மாநாடு; ‘பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் உயிரிழப்பு’ - முதல்வர் இரங்கல்!

CM condolence for lost his life of policeman who went for TVK conference security work

Advertisment

நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நேற்று முன்தினம் (27.10.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய் பல்வேறு கருத்துகளை முன்வைத்திருந்தார். முன்னதாக இந்த மாநாட்டிற்கான பாதுகாப்புப் பணிக்காகச் சென்ற காவலர் சத்தியமூர்த்தி என்பவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவியை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், “செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தவர் சத்தியமூர்த்தி (வயது 27). இவர் கடந்த 26ஆம் தேதி (26.10.2024) அன்று இரவு சுமார் 08.00 மணியளவில் அரசியல் கட்சி ஒன்று நடத்திய மாநாட்டின் பாதுகாப்புப் பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அதன்படி இவர் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யூர், அகரம் மேம்பாலம் அருகில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இவர் மீது எதிர்பாராதவிதமாக கார் ஒன்று மோதிய விபத்தில் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து சிகிச்சைக்காக இவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

CM condolence for lost his life of policeman who went for TVK conference security work

Advertisment

அதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காவலர் சத்தியமூர்த்தி இன்று (29.10.2024) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். காவலர் சத்தியமூர்த்தியின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். காவலர் சத்தியமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, அவரது குடும்பத்திற்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Conference police Vikravandi
இதையும் படியுங்கள்
Subscribe