Skip to main content

10 ஆண்டுகளுக்குப் பிறகு பேரவையில் கேள்விக்கு பதிலளித்த முதல்வர்!!

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

l;

 

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. 13ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மற்ற துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மூன்று துறைகளின் மீதான விவாதத்தில் அந்தந்த துறைகளின் அமைச்சர் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிப்பார்கள். 

 

இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசில் சட்டப்பேரவையில் முதல் நாளாக இன்று கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டது. இதில், அவையில் உள்ள உறுப்பினர்கள் பங்கேற்று தங்களின் கேள்விகளை முன்வைத்தார்கள். உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்துவந்த நிலையில், சில கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரடியாக பதிலளித்தார். கடந்த 10 ஆண்டுகளில் கேள்வி நேரத்தின் போது முதல்வர் பதிலளிப்பது இதுவே முதல்முறை. கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில், முதல்வர்கள் சார்ந்த துறைகளின் கேள்விகள் விவாத நேரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

சார்ந்த செய்திகள்