Advertisment

நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து-முதல்வர் அறிவிப்பு

 CM to announce the cancellation of traffic between districts tomorrow

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைசெயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

Advertisment

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும், நிலையில், முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார்.அதில்,

Advertisment

நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையேயான மண்டல போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. மாவட்டத்திற்குள்மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல இனி இ-பாஸ் பெற வேண்டும். மாவட்டங்களுக்கு இடையே கார், இருசக்கர வாகனம், தனியார் போக்குவரத்து முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. காய்கறிகள், இறைச்சி கடைகளுக்கு சென்றால் கட்டாயம் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உள்ள பகுதிகளில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

edappadi pazhaniswamy corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe