Advertisment

ஓபிஎஸ்சை சந்தித்த அமைச்சர்கள் முதல்வருடன் ஆலோசனை!

CM AND DEPUTY CM MEET WITH MINISTERS

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசித்த அமைச்சர்கள், முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகின்றன.

Advertisment

தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தங்களது இல்லங்களில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றன.

Advertisment

அதன் தொடர்ச்சியாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஆர்.பி.உதயக்குமார், ஜெயக்குமார் உள்ளிட்டோருடன் சுமார் 02.30 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

CM AND DEPUTY CM MEET WITH MINISTERS

துணை முதல்வருடனான ஆலோசனை நிறைவடைந்த நிலையில், முதல்வருடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகவுள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "அ.தி.மு.க. ராகுகாலம், எமகண்டம் பார்க்காது; அனைத்து நாட்களும் 'Golden Days'தான், அண்ணன், தம்பிக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுதானிருக்கும்" என்றார்.

admk discussion ministers ops_eps
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe