3 சுரங்கப்பாதைகள் மூடல்... பூண்டி ஏரியில் நீர் திறப்பு!

Closure of 3 tunnels ... Water opening in Boondi Lake!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதியில் இன்னும் 6 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. கெங்கி ரெட்டி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரியிலிருந்து ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கனமழையால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 3000 கனஅடியாக அதிகரித்ததையடுத்து ஏரியின் மொத்த கொள்ளளவான 35 அடியில் 34.6 அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

Chennai rain weather
இதையும் படியுங்கள்
Subscribe