இன்று மாலையுடன் டாஸ்மாக் மூடல்...

திருப்பரங்குன்றம், அவரக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மே 19 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் பிரச்சாரங்களைதொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில், இன்றுடன் தேர்தல் பரப்புரை முடிவதால் இறுதிக்கட்ட பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 Closing down TASMAC  in from today evening...

இந்நிலையில் இடைத்தேர்தல் நடக்கும் 4 தொகுதிகளில் இன்று மாலை முதல் மேல் 19 ஆம் தேதிவரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகள் உள்ள மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் இதுவரை ரூபாய் 156.86 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிசத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

byelection closed elections TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe