சென்னை திருச்சி ரயில்வே மார்க்கத்தில் உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் இடையில் உள்ளது கோ.பூவனூர். இந்த ஊரில்பேசஞ்சர்ரயில் மட்டும் நின்று செல்லும். இந்த ஊருக்கு அருகே ரயில்வேகேட்ஒன்று உள்ளது.மாத்தூர்,வீரட்டிக்குப்பம்,பவழங்குடி, பழைய பட்டினம், சித்தேரி குப்பம் உட்பட பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். இதன் வழியாகபேருந்துபோக்குவரத்தும் உண்டு.
இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் சேதுஎக்ஸ்பிரஸ்ரயில் உளுந்தூர்பேட்டை கடந்து விருத்தாசலம்நோக்கிச்சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் வருவதை ஒட்டி கேட்கீப்பர்பூவனூர்ரயில்வேகேட்டைமூடினார். கேட்டை கடந்து ரயில் சென்ற பிறகு, கேட்கீப்பர்போக்குவரத்திற்குக்கேட்டை திறக்க முயன்றார். ஆனால் கேட்டை திறக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் கேட்டை திறக்க முடியவில்லை.
இதையடுத்து ரயில்வே தொழில்நுட்பஊழியர்களுக்குத்தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி கேட்டை திறந்தனர். இந்த கேட்டை கடந்து செல்வதற்காக வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்தன. இதனால் பொதுப் போக்குவரத்து அப்பகுதியில் சில மணி நேரம் முடங்கிப் போனது.