சென்னை உயர் நீதிமன்றம் முழுமையாகத் திறக்கப்படாத நிலையில், வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூடிவைக்கப்பட்ட வழக்கறிஞர்களின் அறைகளுக்கும் வாடகை செலுத்தி வருவதாகவும், தலைமை நீதிபதி முன் ‘முறையீடு’ செய்த வழக்கறிஞர் சூரியப்பிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தை முழுமையாகத் திறக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
வழக்கறிஞர்களின் அறைகளுக்கான வாடகையைத் தள்ளுபடி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தலைமை நீதிபதி பதிலளித்துள்ளார்.