Advertisment

கல்குவாரியை மூடு!! மலையில் குடியேறிய மக்கள்!!

Advertisment

நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் வட்டத்திலுள்ள மலை சூழ்ந்த சிறிய கிராமம் ஆனையூர்.

அந்தக் கிராமத்தில் தற்போது மாவட்ட நிர்வாகம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்குப் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி கொடுத்தை ரத்து செய்யக் கோரி சுமார் 100 வீடுகளைக் கொண்ட ஆண் பெண்கள் 150 பேர்கள் உள்ளிட்ட பள்ளிக் குழந்தைகள் 40 பேருடன் இன்று காலை 9 மணியளவில் அருகில் உள்ள மலையில் குடியேறும் போராட்டத்தை நடத்தி மலையேறி விட்டார்கள். தங்களுக்கான உணவை அங்கேயே சமைத்து உண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஏற்கனவே எங்கள் கிராமத்தில் 15 கல்குவாரிகள் செயல்படுகின்றன அதில் பாறைகளைப் பெயர்த்தெடுக்க வைக்கப்படும் அதிர் வெடிகளால் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. அடி மட்டம் ஆட்டம் காண்கிறது. வீடு பெயர்ந்து விழுந்து விடுகிற நிலையில்அச்சமாக உள்ளது. கல்குவாரியை மூட வேண்டி பல முறை மனுக் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதனைக் கண்டிக்கிற வகையில் மலையில் குடியேறும் போராட்டம் நடத்துகிறோம். என்கிறார் ஆனையூரின் முருகேசன்.

Advertisment

கல் குவாரிகளின் வெடியால் வீடுகள் சேதமாவதைத் தடுத்த பல முறை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்று முறை அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியும் நடவடிக்கை இல்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்க, நடவடிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது என்கிறார் சி.பி.எம்.மின் மாவட்டச் செயற்குழு உறுப்பினரான முத்துப்பாண்டியன்.

மக்களின் போராட்டம் நடக்கிற மலைப்பக்கம் கிராம நிர்வாக அதிகாரியைத் தவிர வருவாய்துறையின் அதிகாரிகள் யாரும் அம்மக்களைச் சந்திக்க வரவில்லை என்கிறார்கள்.

forest people
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe