Climb the watchtower; Treatment of an electrocuted person

Advertisment

திண்டுக்கல்லில் மது போதையில் இளைஞர் ஒருவர் கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறி ரகளை செய்த நிலையில் மின்சாரக் கம்பியைத்தொட்டதில் தூக்கி வீசப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியைச்சேர்ந்த வேலு என்றஇளைஞர் இன்று அதிகாலை பேருந்து நிலையத்தில் உள்ள காவல்துறை கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறி மது போதையில் ரகளையில் ஈடுபட்டார். இளைஞர் ரகளை செய்வது குறித்து அறிந்த போலீசார் மற்றும் அங்கிருந்த பகுதி மக்கள் கீழே இறங்கும்படி அறிவுறுத்தியும் அந்த நபர் இறங்கவில்லை. அப்பொழுது மேலே இருந்த மின்கம்பியைத்தொட்டதில் அந்த நபர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அந்த நபரை மீட்ட போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.