Skip to main content

‘விழிப்புணர்வு ஏற்படுத்த காலநிலை அறிவு இயக்கம்’ - தமிழக முதல்வர் உரை

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

 'The case again; Resumption of investigation'

 

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் இன்று தமிழக தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய அவர், ''தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் பரப்பளவை 21 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த திட்டங்களை சில மாதங்களுக்கு முன்னர் துவக்கி வைத்தேன். இதுவரை சுமார் 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் பதியம் போடப்பட்டு அவற்றை நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்த திட்டம் தமிழ்நாட்டில் பசுமை போர்வையை அதிகரிப்பதோடு கார்பனை உள்வாங்கவும் பயன்படும். பொதுவாக வெப்ப மண்டல நாடுகளில் உள்ள காலநிலையையும் பருவங்களையும் கணிப்பது கடினம். குறிப்பாக சர்வதேச வானிலை மாதிரிகளால் இந்த பகுதிக்கு பிரத்தியேகமான சில விஷயங்களை கணிப்பது மிகவும் கடினம். அதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் காலநிலை ஸ்டுடியோ செயல்படுத்தப்பட்டு தமிழ்நாட்டிற்கான தனித்துவமான மாதிரிகளை உருவாக்க 10 கோடி ரூபாய் தமிழக அரசு நிதி நிலையில் ஒதுக்கி திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறது.

 

ஒரு மாநிலத்தை கார்பன் சமநிலை எட்டிய மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனில் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கார்பன் சமநிலை அடைய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 10 கிராமங்களை மீள் தன்மையுள்ள கிராமங்களாக மாற்றப்படும் திட்டம் இன்று நிறைவேற்றப்படுகிறது. காலநிலை குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழில் முனைவோர் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க காலநிலை அறிவு இயக்கத்தை செயல்படுத்த இருக்கிறோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்