Clerk caught on bribe case

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் புத்தாநத்தத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவர் புத்தா நத்தத்தில் ஊராட்சி தொடர்பான அரசு பணிகளை டெண்டர் எடுத்து செய்து வருகிறார். அதன்படி புத்தாநத்தத்தில் புதிய போர்வெல் மின் மோட்டார் மற்றும் பைப்லைன் அமைப்பது தொடர்பாக ரூ. 4 லட்சத்திற்கு வேலை எடுத்துள்ளார். இந்த வேலையை செய்து முடித்தவுடன் இவர் செய்த வேலைக்கான தொகையை பெறுவதற்கு புத்தாநத்தம் ஊராட்சி கிளார்க் வெங்கட்ராமனை அணுகியுள்ளார்.

Advertisment

அப்போது அவர், 2% கமிஷனாக 8000 ரூபாய் கேட்டு பின் இரண்டாயிரம் குறைத்துக் கொண்டு 6 ஆயிரம் லஞ்சமாக கொடுக்குமாறு வெங்கட்ரமணன் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முகமது இஸ்மாயில், திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்துள்ளார். அவரது புகாரின்பேரில் டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெங்கட்ரமணன் லஞ்சம் வாங்கும்போது அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.

Advertisment