clearing lotus plant in drains is going on in full swing In Chidambaram

சிதம்பரம் நகரத்தின் வடிவால் வாய்க்காலாக கான்சாகிப் வாய்க்கால் உள்ளது. அதே நேரத்தில் இந்த வாய்க்கால் பிச்சாவரம், கொடிப்பள்ளம், நற்கந்தன்குடி, கோவிலாம்பூண்டி, மீதிகுடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் பாசன வாய்காலக உள்ளது. இந்த வாய்க்காலில் அதிக அளவு ஆகாயத் தாமரை செடிகள் மற்றும் முட்செடிகள் படர்ந்துள்ளது. இதனால் மழை மற்றும் வெள்ள காலங்களில் விரைவாக வெள்ளநீர் மற்றும் மழைநீர் வடிவதற்குச் சிரமம் ஏற்படும் சூழல் உள்ளது.

Advertisment

இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் இதனைச் சரி செய்யும் விதமாக பொதுப்பணித்துறை சார்பில் கான்சாகிப் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை பொக்ளின் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளைத் திங்கள் கிழமை(19.8.2024) சிதம்பரம் நீர்வளத் துறை செயற்பொறியாளர் காந்தரூபன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இவருடன் உதவி செயற் பொறியாளர் கொளஞ்சிநாதன், உதவிப் பொறியாளர் பார்த்திபன் உள்ளிட்ட நீர்வளத்துறையினர் உடன் இருந்தனர். இந்த பணியினை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

Advertisment