Cleaning workers struggle against health inspector!

திருச்சி, சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி அலுவலகத்தில் 17 நிரந்தரதுப்புரவுபணியாளர்களும், 37 தற்காலிக துப்புரவு பணியாளர்களும் வேலை செய்து வருகின்றனர். இவர்களது பணியை பகுத்தளிக்கவும், கண்காணிக்கவும் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளராக புவனேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார்.

Advertisment

சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரி, முசிறி பேரூராட்சியில் பணியாற்றி தற்போது மாறுதலாகி சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சிக்கு சுகாதார ஆய்வாளராக பணியிடை மாற்றம் செய்து வேலை செய்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இடையே தற்போது மோதல் போக்கு ஏற்பட்டது. சுகாதார ஆய்வாளர் துப்புரவு பணியாளர்கள் இடையே இரு பிரிவை ஏற்படுத்தி விரோதப் போக்கினை ஏற்படுத்தி வருகிறார் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இன்று காலை வருகை பதிவேடு எடுக்கும்போது துப்புரவு பணியாளர்களை சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரி ஒருமையில் பேசி, சாதிப் பேரை சொல்லித் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த சுகாதார பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதின் பேரில் பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Advertisment