Advertisment

முறையான சம்பளம் தரக் கோரி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

Cleaning workers protest demanding proper pay

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி நிர்வாகத்தில் பணியாற்றும் 130க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இவர்களுக்கு முறையான ஊதியம் கடந்த சில மாதங்களாக வழங்கவில்லை. இதுகுறித்து அவர்கள் ஆணையரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலை நீடித்துவருகிறது.

Advertisment

இதனால் ஜூன் 21ஆம் தேதி தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் உழைப்பைச் சுரண்டும் அதிகாரிகளைக் கண்டித்தும், முறையான சரியான தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் எனக் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், தனிமனித இடைவெளியின்றி கரோனா நோய்த் தொற்று பரவும் விதமாக தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

protest cleaning worker ranipet
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe