A cleaner was lost his lives for gang in chennai

சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு (37). இவர், சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் கீழ் துப்புரவு பணியாளராக பணி புரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Advertisment

இவர், நேற்று (31-01-24) மதியம் வழக்கம் போல் தூய்மை பணி மேற்கொள்வதற்காக திருவான்மியூர் பகுதியில் மின்சார ஆட்டோவை ஒட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த சில மர்ம கும்பல் டில்லிபாபு ஓட்டி வந்த ஆட்டோவை வழிமறித்து நிறுத்தினர்.

Advertisment

இதனையடுத்து, அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் டில்லிபாபுவை வெட்டினர். இதில் படுகாயமடைந்த டில்லிபாபு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ஆனாலு, வெறி அடங்காத அந்த கும்பல் டில்லிபாபுவை ஓட ஓட விரட்டி வெட்டினர். மேலும், டில்லிபாபுவின் கழுத்தை அறுத்து படுகொலை கொடூரமாகக் கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டுஅதிர்ச்சியடைந்த பொது மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த திருவான்மியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு வந்த அவர்கள், படுகொலை செய்யப்பட்ட டில்லிபாபுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட டில்லிபாபுவுக்கும், அவரது வீட்டில் அருகே உள்ள சிலருக்கும் இடையே கடந்த 27ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராற்றின் காரணமாக டில்லிபாபுவை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment