/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/64_23.jpg)
சேலம் மாநகராட்சியில் பொதுமக்களின் பங்களிப்புடன் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை
வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் முன்னெடுத்துவருகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தனிநபர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலான செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துகிறது. இதற்காக, தூய்மைக்கான மக்கள் இயக்கம் பற்றி பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் , 'எனது குப்பை எனது பொறுப்பு', 'எனது நகரம் எனது பெருமை' ஆகிய தலைப்புகளில் குறும்படம் எடுக்கும்போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவற்றில், ஏதாவது ஒரு தலைப்பில் குறும்படம் தயாரிக்கலாம். குறும்படங்களின்கால அளவு 3 முதல் 5 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும். பின்னணி இசை, பாடலுடன் இருக்கவேண்டியதும் அவசியம். சிறப்பாக தயாரிக்கப்பட்ட குறும்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை 5 மணிக்குள், மாநகர நல அலுவலர் அலுவலகத்திற்கு குறும்படங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)