Advertisment

''கிளீன் சிட்டி, கிரைம் ஃப்ரீ சிட்டி என்பதுதான் நோக்கம்''-தமிழக டிஜிபி பேட்டி!

publive-image

Advertisment

சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றங்கள் தடுக்கப்படும் என தமிழக டிஜிபி தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பேசுகையில், ''5 கோடி ரூபாய் மதிப்பில் சிசிடிவி கேமரா பொருத்தும்திட்டத்தை தஞ்சையில் ஏற்படுத்தியுள்ளோம். 1,440 கேமராக்கள் தஞ்சாவூர் சிட்டியில் பொருத்தப்பட்டுள்ளது. அதனை கண்காணிக்க கண்ட்ரோல் ரூம் ஒன்றை திறந்து வைத்துள்ளோம். இதன் மூலம் குற்றங்கள் குறையும். குறிப்பாக வாகனங்களில் மோதிவிட்டு தப்பித்து செல்பவர்களை பிடிக்க இது உதவும், குற்றங்கள் செய்துவிட்டு தப்பித்துசெல்பவர்களை ட்ராக் செய்ய இவை உதவியாக இருக்கும். கடத்தலில் ஈடுபடுபவர்களை எளிதாக பிடிக்க முடியும். மொத்தத்தில் எல்லா விதமான குற்றங்களும்இதனால் குறையும். க்ளீன் சிட்டி, கிரைம் ஃப்ரீ சிட்டி என்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதனால் ஸ்மார்ட் சிட்டியின் நோக்கம் நிறைவேறும். குழந்தைகளின் தற்கொலை என்பது ஒரு பெரிய சப்ஜெட். எங்களை பொறுத்தவரை போதுமான புலன்விசாரணை செய்து யாராவது தப்பு பண்ணிருக்காங்களா,அவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பது எங்கள் வேலை'' என்றார்.

Thanjavur police DGPsylendrababu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe