/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1002_157.jpg)
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்துள்ள மண்கரடுசர்ச் வீதியைச் சேர்ந்தவர் செல்வன் (38). இவரது மனைவி கவிதா (33). இவர்களது மகள் செளபர்ணிகா (13). கல்யாணிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் கவிதா ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். மகள் செளபர்ணிகாவும் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனால், தாய் கவிதாவும்மகள் செளபர்ணிகாவும் தினமும் மொபட்டில் ஒன்றாக பள்ளிக்குச் செல்வது வழக்கம். நேற்று காலையில் இருவரும் வழக்கம்போல மொபட்டில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
கவிதா வண்டி ஓட்ட பின்னால் மகள் செளபர்ணிகா அமர்ந்து சென்று கொண்டிருந்தார். எழுமாத்தூர்- சோளங்காபாளையம் அடுத்துள்ள வெப்பிலி பிரிவு அருகே சென்றபோது, திடீரென மொபட்டின் பின்பக்க டயர் வெடித்தது. இதில், நிலை தடுமாறி கவிதா மற்றும் செளபர்ணிகா கீழே விழுந்தனர்.
இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாகச் சென்றவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி செளபர்ணிகா உயிரிழந்தார். இதுகுறித்து, மலையம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். படுகாயம் அடைந்த கவிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)