Class 5 student incident in private college bus collision!

பேருந்து நிழற்கூடத்தில் காத்திருந்த ஐந்தாம் வகுப்பு சிறுவன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த செம்மண்காடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் பிரபாகரன். கார்கூடல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில்ஐந்தாம் வகுப்பு படித்து வந்த பிரபாகரன் வழக்கம்போல் பள்ளி செல்வதற்காக செம்மண்காடு பகுதி பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அந்த வழியாக நாமக்கல் நோக்கிசென்றதனியார் கல்லூரி பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி பேருந்து நிழற்கூடத்தில் காத்திருந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

Advertisment

இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த மாணவிகள் இரண்டு பேர் காயமடைந்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயில்பட்டி காவல்துறையினர் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தனியார் கல்லூரி பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.