Advertisment

12 ஆம் வகுப்பு தமிழ் தேர்வு; 50,674 பேர் ஆப்சென்ட்!

Advertisment

Class 12 Tamil First Paper; 50674 Absent!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கிய தமிழ் மொழித் தேர்வை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்எழுதவில்லை எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 13 ஆம் தேதி) தொடங்கியது. அதேபோல் நாளை (மார்ச் 14 ஆம் தேதி) பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2022 - 2023 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்புத்தேர்வினை 8.5 லட்சம் மாணவர்களும், அதே போல 11 ஆம் வகுப்புத்தேர்வினை 7.8 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளனர். 3,225 மையங்களில் இந்த பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் இந்த தேர்வுப் பணிகளிலும் விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தொடங்கியது.

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழித்தேர்வை 50,674 பேர் எழுதவில்லை எனப் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்தேர்வை பள்ளி மாணவர்கள் 49,559 பேரும் தனித்தேர்வர்கள் 1,115 பேரும் தேர்வு எழுத வரவில்லை எனப் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் முதல் தாள் தேர்விற்குப் பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 8,01,744 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 49 ஆயிரத்து 559 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதுபோல் தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 901 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 7 ஆயிரத்து 786 பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். 1,115 பேர் தேர்வு எழுத வரவில்லை.’ எனப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe