Skip to main content

11 ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள்; 12,660 பேர் ஆப்சென்ட்!

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

b


தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 14 ஆம் தேதி) தொடங்கியது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2022 - 2023 கல்வியாண்டிற்கான 11 ஆம் வகுப்புத் தேர்வினை 7.8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

 

நேற்று நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழித்தேர்வை 50,674 பேர் எழுதவில்லை எனப் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்திருந்தது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் முதல் தாள் தேர்வை பள்ளி மாணவர்கள் 49,559 பேரும் தனித்தேர்வர்கள் 1,115 பேரும் தேர்வு எழுத வரவில்லை எனப் பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டிருந்த நிலையில் இன்று நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தமிழ் மொழி தேர்வை 12,660 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பள்ளிகளின் தூய்மைப் பணிக்காக ரூ1.90 கோடி ஒதுக்கீடு’ - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 10/12/2023 | Edited on 11/12/2023
'Allotment of Rs 1.90 crore for cleaning work of schools' - Chief Minister M. K. Stalin

மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு 04.12.2023 முதல் 09.12.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  உத்தரவுப்படி 'மிக்ஜாம்' புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, நாளை (11.12.2023) பள்ளி திறக்கும் நாளில் நல்ல கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த பணிகளைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இப்பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 40 இலட்சம் ரூபாயும், ஆக மொத்தம் ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்களை வழங்க நாளை (11.12.2023) மாணவர்களின் தேவைகளைக் கண்டறிந்து (12.12.2023) அன்று பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு; பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்

Published on 07/12/2023 | Edited on 08/12/2023
Mikjam storm damage; Department of School Education Core Instruction

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இன்னும் தேங்கியுள்ளதால், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

அதே சமயம் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குக் கடந்த 4 ஆம் தேதி முதல் (04.12.2023) இன்று (07.12.2023) வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் நாளை (08.12.2023) அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (08.12.2023) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஆறு வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே வேளையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Mikjam storm damage; Department of School Education Core Instruction

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளைத் திறக்கும் முன் செய்ய வேண்டிய வழிகாட்டுதல்களைப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளார். அதில், “நாளை (08.12.2023) முதல் பள்ளிகளுக்குச் சென்று உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தை முழுமையாகத் தூய்மைப்படுத்த வேண்டும். பள்ளி சுற்றுச்சுவர் அருகில் மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள உடைந்த பொருட்கள், கட்டட இடிபாடுகளை அகற்ற வேண்டும். மழையால் பள்ளி வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றைப் பூட்டி மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்” என 4 மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.