Class 11 student Incident in Sivakasi... Police investigation!

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளியில் நிகழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அண்மையில் திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிவகாசியில் 11ம்வகுப்பு படித்து வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிவகாசியில் அய்யம்பட்டி எனும்கிராமத்தில் அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய நிலையில் பள்ளிச் சீருடையுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து தகவலறிந்துசம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.